தமிழ்நாடு

பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார் | Uma Ramanan

தந்தி டிவி

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

தமிழில் வெளியான நிழல்கள் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பூங்கதவே தாழ்திறவாய் என்ற பாடல் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்தவர் உமா ரமணன். எம்.எஸ்.வி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார். விஜய்யின் திருப்பாச்சி படத்தில், கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு பாடலை பாடியிருந்தார் உமா ரமணன். அதன் பிறகு பாடல் வாய்ப்பு அதிகம் கிடைக்காவிட்டாலும் மேடைக்கச்சேரிகளில் கணவருடன் இணைந்து பாடி வந்தார் உமா ரமணன். இந்நிலையில், சென்னை அடையாறில் வசித்துவந்த உமா ரமணன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

CM Vijay | நேரில் சந்தித்து CM விஜய்யை உருகவிட்ட பரந்தூர் கிராம மக்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

TN Assembly | DMK | TVK | பெயரை மட்டும் குறிப்பிடாமல் Non-ஸ்டாப் அட்டாக் செய்த முஸ்தபா

Cauvery Issue| காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக வந்த சூப்பர் உத்தரவு

TN Assembly | பேரவையையே அதிரவிட்ட பேச்சு.. சபாநாயகரிடம் ஓடிவந்த MLA முஸ்தபா

SP Velumani | லிஸ்ட் போட்ட எஸ்.பி.வேலுமணி - சட்டென்று குறுக்கிட்ட சபாநாயகர்