நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களை பெற்றது. இந்த வெற்றிக்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இணையாக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரும்பங்கு உண்டு என கட்சியினர் கருதுகின்றனர்.இதனால், அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் திமுக முன்னணி நிர்வாகிகளும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதேபோல், மாவட்டச் செயலாளர்கள் பலரும், ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணியில் பொறுப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.