தமிழ்நாடு

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில்முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக,

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உயர்ரக உபகரணங்களை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பெரியாருக்கு காவி சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும், அரசு தெளிவான தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் தலைவர்கள் இல்லை, அதனால் தான் பொறுப்பு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்