தமிழ்நாடு

இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு - சரியாக பழுது நீக்காத காரணத்தால் வாடிக்கையாளர் ஆத்திரம்

சென்னையில் இருசக்கர வாகனத்திற்கு சரியாக பழுது நீக்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில், பிரபல இருசக்கரவாகன ஷோரூம் முன்பு வாகனம் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னையில் இருசக்கர வாகனத்திற்கு சரியாக பழுது நீக்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில், பிரபல இருசக்கரவாகன ஷோரூம் முன்பு வாகனம் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவர் கடந்த ஜனவரி மாதம் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியிருக்கிறார்,பின்பு அதே இடத்தில் சர்வீஸ்க்கு விட்டிருக்கிறார். வாகனம் பழுதுபார்க்கப்பட்டதில் திருப்தி ஏற்படாத காரணத்தால் அந்நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தனது வாகனத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி வழங்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அந்நிறுவன ஊழியர்கள் மறுக்கவே ஆத்திரத்தில் தனது இருசக்கர வாகனத்தை கற்களால் உடைத்து பெட்ரோல் ஊற்றி நடுரோட்டில் தீவைத்து எரித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் இரு சக்கர வாகனத்தை தீயை அணைத்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து கோபிநாதிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்