#thoothukudi | #Kayathar கயத்தாறு அருகே இரு தரப்பினர் மோதல் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசன்குளத்தில், வீடு கட்டும் விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 4 பேர் என 8 பேர் காயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இருதரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.