தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு - டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது

தந்தி டிவி

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து, சசிகலா, தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 8-ந் தேதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வழங்குகிறது. இந்த வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெ​ரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’