தமிழ்நாடு

கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு... மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்தனர். இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தந்தி டிவி

கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு... மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்தனர். இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சேந்தங்குடியைச் சேர்ந்த அச்சக தொழிலாளி பிரபு,அதே பகுதியை சேர்ந்த லோடுமேன் செல்வம்,வீராசாமி, சரத்குமார் உள்ளிட்ட 6 பேர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பிரபு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு இறந்தார். தொடர்ந்து செல்வமும் வீட்டிலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வீராசாமி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட 2 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஊரடங்கு காலத்தில், போலீசாரின் கெடுபிடியையும் மீறி, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆங்காங்கே ஊறல் மற்றும் எரிசாராயம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்