தமிழ்நாடு

இரட்டை பெண் குழந்தைகள் மரணம் - கதறும் தாய்! நெஞ்சை உலுக்கும் காட்சி..!

தந்தி டிவி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கந்தசாமி(38), தனலட்சுமி(33) தம்பதியினர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு 8 வயதில் அகிலன் என்ற ஒரு மகன் உள்ளார்.

கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 11 மாதத்திற்கு முன்னர் இத் தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்நிலையில் ரேஷ்மா, தனுஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குழந்தையின் தாயார் பின்னர் தொடர்ந்து அருகில் உள்ள வயிற்றுப்போக்கு நிற்காததால் வாலிகண்டபுரம் அரசு மருத்துவமனையில் காட்டி ஆங்கில மருந்தும் கொடுத்துள்ளார்.

பின்னர் இதனை தொடர்ந்து வயிற்றுப்போக்கு நிற்காததால் தனலட்சுமி அவரது பாட்டி சாந்தியுடன் தனது இரண்டு பெண் கைக் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வாலிகண்டபுரம் கிராமத்தில் நாட்டு வைத்தியம் செய்து வரும் ஜெயாலுதீன் மனைவி சைதானி என்பவரை சிகிச்சைக்காக நேற்று அனுகியுள்ளார்.

இதனையடுத்து குழந்தைகளை பரிசோதித்த வைத்தியர் சைதானி அவர்கள் இருவருக்கும் நாட்டு மருந்து கொடுத்துள்ளார்.

நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட குழந்தைகளில் நேற்று மதியம் 01:30 மணி அளவில் ரேஷ்மா என்ற குழந்தை மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தனலட்சுமி உள்ளிட்ட அவரது பாட்டி மற்றொரு குழந்தை தனுஸ்ரீயை உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் குழந்தை தனுஸ்ரீயும் இன்று அதிகாலை 01.30 மணியளவில் உயிரிழந்து விட்டது.

இரண்டை பெண் குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிற நிலையில், இந்த சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளின் தாய் உள்ளிட்ட அவரது பாட்டியிடமும், நாட்டு மருந்து கொடுத்த வைத்தியர் சைதானியிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து டாக்டர் பிரேத பரிசோதனையில் வைரஸ் வயிற்று போக்கு காரணமாக குழந்தைகள் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது இந்நிலையில் இதனை தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இரட்டை பெண் குழந்தைகள் இறந்த சம்பவம் அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போறை கண்கலங்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்