தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, தவெக தலைவர் விஜய் மாலை 3 மணிக்கு மேல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கரை சந்திக்கிறார். தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்க உள்ளார். இந்நிலையில், நாளை முதலமைச்சராக விஜய் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும், நேரு உள்விளையாட்டு அரங்கம் இல் பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.