கடலூர் மாவட்டம் சித்திரைப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் கொடியை அறுத்து, காலால் மிதித்து அவமதித்ததாக, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது... நாம் தமிழர் கட்சியின் புவனகிரி தொகுதி வேட்பாளர் சுமதி, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்....