``ஆட்சியை கவிழ்க்க.. சென்னையில் 2 ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில்..’’ - திடுக்கிட வைத்த புது தகவல் #tvk #tvkmlaissue தவெக ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசி, மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் தாங்கள் கூறும் வகையில் வாக்களித்தால் ரூ.35 கோடி வழங்குவதாக பேரம் பேசியதாகவும், அதை இளையராஜா மறுத்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் குடும்பத்துடன் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில், ஏற்கனவே 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்கச் செய்வதற்கான திட்டம் குறித்து சென்னையில் உள்ள இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சதித்திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.