ஆசிரியர்களின் கருத்துகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர் ராஜ்மோகன் அனைத்து ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, முதலமைச்சரிடம் பேசி தேவையான நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். 80-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில், காலிப்பணியிடங்களை நிரப்புதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்தல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன