தமிழ்நாடு

TVK | மாவட்ட செயலாளர் பிறந்தநாள் - கார், பைக்கில் கோஷம் போட்ட படி படையெடுத்த தவெகவினரால் பரபரப்பு

மாவட்ட செயலாளர் பிறந்தநாள் - கார், பைக்கில் கோஷம் போட்ட படி படையெடுத்த தவெகவினரால் பரபரப்பு

thanthitv

TVK | மாவட்ட செயலாளர் பிறந்தநாள் - கார், பைக்கில் கோஷம் போட்ட படி படையெடுத்த தவெகவினரால் பரபரப்பு மாவட்ட செயலாளர் பிறந்தநாள் - த.வெ.க.வினரின் அட்ராசிட்டியால் பரபரப்பு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், தவெக மாவட்ட செயலாளரின் பிறந்த நாளை ஒட்டி, அக்கட்சியின் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் உதயகுமார். இவரது பிறந்தநாளை ஒட்டி, வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே, ஏராளமான தவெகவினர் பைக்குகளில் குவிந்துள்ளனர்.. அப்போது, கிரேன் மூலம் உதயகுமாருக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. ’ தொடர்ந்து, பைக்குளில் சத்தமாக ஹார்ன் அடித்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து, இடையூறாக உள்ள வாகனங்களை எடுக்குமாறு போலீசார் கூறியதால் தவெகவை சேர்ந்த சிலர் வாக்குவாதம் செய்தனர். வழிநெடுகிலும் பட்டாசு வெடித்த படி தவெக தொண்டர்கள் சென்றனர். அப்போது, தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் கையில் பட்டாசை பிடித்தும், வாளை சுழற்றியும் கார் மேல் நின்ற காட்சியும் வெளியாகி உள்ளது. இந்த பரபரப்புகளால் வந்தவாசியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்