தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு விழா

குற்றவாளிகளுக்கு காப்பு போட்டே பழக்கப்பட்ட போலீஸ் ​அதிகாரிகள், பெண் காவலர் ஒருவருக்கு நடத்திய வளைகாப்பு விழா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாலட்சுமி, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருகிறார். உறவினர்கள் அனைவரும் வெளியூரில் இருப்பதால், கர்ப்பமாக இருக்கும் மகாலட்சுமி, வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து வேதனையில் இருந்திருக்கிறார். இதனை அறிந்த ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள், மகாலட்சுமிக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சீர்வரிசை தட்டுக்களுடன் 5 வகையான சாதங்கள் செய்து, தடபுடலாக, மகாலட்சுமியின் வளைகாப்பு நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாக காவல் நிலையங்களில் காதல் திருமணங்கள் நடத்தப்படும். ஆனால், வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்