தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 40 மீனவர்கள் திரும்பாததால், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மீனவ சங்கங்கள் முறையிட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட கனிமொழி எம்.பி, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.