தமிழ்நாடு

நெல் கொள்முதலை விரைவுபடுத்த நடவடிக்கை தேவை - தினகரன் கோரிக்கை

விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், முதலமைச்சர் பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக குறிபிட்டுள்ளார். இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள் முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு