தமிழ்நாடு

பட்டாசு வாங்க சிவகாசிக்கு பயணம் - கார் மரத்தில் மோதி ஒருவர் பலி

பட்டாசு வாங்க சிவகாசிக்கு பயணம் - கார் மரத்தில் மோதி ஒருவர் பலி

thanthitv

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே பட்டாசு வாங்கச் சென்ற கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருவர் லேசான காயமடைந்தனர்.

தீபாவளிக்காக பட்டாசு வாங்குவதற்கு சிவகங்கையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகங்கை பொதிகை நகரைச் சேர்ந்த சிவசங்கர் உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த கோபி படுகாயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிரகாஷ் மற்றும் மணிபாரதி ஆகிய இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

#sivagangai #accident #crackers #thanthitv

Aadhaar cards | Palladam | சாலையோர குப்பையில் குவியலாக கிடந்த ஆதார் அட்டைகள்..

Accident | குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய சிறுவன் - கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து

Velankanni Issue| வேளாங்கண்ணியில் லாட்ஜில் சிறுமிகள்.. நடுங்க விடும் வக்கிர செயல் -சிக்கிய இளைஞர்கள்

Kodaikanal ``ஜனநாயகன் ஷூட்டிங்கின் போதே யோசித்து முதல்வராக பிள்ளையார் சுழி போட்ட CM விஜய்“

EB Power Tender| 4வது மின்சார டெண்டர் வெளியீடு - இம்முறை எவ்வளவு விலை?