தமிழ்நாடு

பிரபல ரவுடி அண்ணாமலையை தொடை நடுங்க விட்ட வருண் SP.. மூலாதாரமே காலி.. நிர்மூலமாக்கிய நிஜ `சாமி'

தந்தி டிவி

திருச்சி மாவட்டத்தில், ஆபரேஷன் அகழி சோதனையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் சாத்தனூர் அண்ணாமலை தொடர்புடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி பட்டியலில் உள்ள நபர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறை சார்பில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய நபர்களை கைது செய்து வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக, ஆபரேஷன் அகழி சோதனையின் கீழ் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் சாத்தனூர் அண்ணாமலை தொடர்புடைய அலுவலகம், அவருடைய உதவியாளர்கள்,வீடுகளில் தனிப்படையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சாத்தனூர் ராஜ்குமார் என்பவர் வீட்டில் 17 பத்திர ஆவணங்களும், மீனாட்சி என்பவரின் வீட்டில் 10 பத்திர ஆவணங்களும் மற்றும் 70 பவுன் நகை மற்றும் 18 லட்சத்து 92 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு