தமிழ்நாடு

கல்லூரியில் கருத்தரங்கு சார்பாக கட்டுரை போட்டிகள் - கருத்தரங்கை ரத்து செய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் மனு

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற இருக்கும் கருத்தரங்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

தந்தி டிவி
திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற இருக்கும் கருத்தரங்கை ரத்து செய்யக்கோரியும், கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம ரவிக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கல்லூரியில் தமிழ் துறை சார்பில் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் என்ற மைய கருத்தில் கருத்தரங்கம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு நடைபெற இருந்த கட்டுரைப் போட்டிகளின் சில தலைப்புகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கஜா புயல் மீட்பு பணிகளுக்கு மாணவர்கள் சென்றிருந்ததால் கருத்தரங்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு