தமிழ்நாடு

பலாத்கார குற்றச்சாட்டால் இளைஞரை உதைக்கும் வீடியோ : வீடியோ இளைஞரை பிடிக்க தனிப்படை

பாலியல் குற்றச்சாட்டால், பொதுமக்கள் அடித்து உதைத்த இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருச்சி பகுதியில், செல்போன்களில் அண்மையில் பரவிய வீடியோ ஒன்றில், சிறுமிகள் முதல் பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடியதாக கூறி, ஒரு இளைஞரை அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகின.இது தொடர்பாக எந்த புகாரும் இல்லாததால், போலீசார் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி பாலக்கரை போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி பீமநகர் பகுதியில் குடியிருந்த, புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என தெரியவந்தது. 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மணிவேலை பிடிக்க காவல் ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையில் தனிப்படையை அமைத்து திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிவேல் பிடிபட்டதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்