தமிழ்நாடு

"அடித்தால் செத்துவிடுவேன், பிறகு உங்கள் இஷ்டம்" - கொள்ளையன் முருகன்

பெங்களூருவில் சரண் அடைந்தது ஏன் என்றும் நகைகளை எங்கே , யாரிடம் கொடுத்தேன் என்றும் முருகன் சுவாராஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளான்.

தந்தி டிவி

திருச்சி நகைக்கடை மற்றும் வங்கி கொள்ளைகளில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன், தற்போது திருச்சி மாநகர தனிப்படையினர் கஸ்டடியில் உள்ளான். பெங்களூருவில் சரணடைந்தது ஏன்? என்ற கேள்விக்கு, முருகன் அளித்த பதில் சுவாரஸ்யமாக இருந்ததாக தனிப்படையினர் தெரிவிக்கின்றனர். பெங்களூரு போலீசார் குற்றவாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவார்கள் என்றும் தமிழக போலீசார் போல் அடித்து துன்புறுத்த மாட்டார்கள் என்றும் அவன் கூறியதாக சொல்கிறார்கள் பெங்களூரில் உள்ள சிறைச்சாலைகள் மிகவும் தூய்மையாக இருக்கும். கழிவறைகள் சுத்தமாக இருக்கும். தண்ணீர் தட்டுப்பாடு அறவே இருக்காது என்றும் முருகன் கூறியுள்ளான. நல்ல சத்துள்ள உணவாக கொடுப்பார்கள் என்பதால் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தேன்' என்று முருகன் தெரிவித்துள்ளான். நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை கர்நாடக போலீசாரிடமும் , வங்கியில் கொள்ளையடித்த நகைகளை திருச்சி மாவட்ட தனிப்படையினரிடமும் கொடுத்து விட்டதாக முருகன் கூறியுள்ளான் அடித்தால் செத்துவிடுவேன். அதற்குப் பிறகு உங்கள் இஷ்டம்" என்று பேசி போலீசாரை அதிர வைத்துள்ளார். கொள்ளை போன நகைகளில், இன்னும் இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்ய வேண்டிய நிலையில், உடல்நிலை சரியில்லாத முருகனிடம் எப்படி நகைகளை பறிமுதல் செய்வது? என்று தெரியாமல் மாநகர தனிப்படை போலீசார் தவித்து கொண்டிருக்கின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்