தமிழ்நாடு

நகைக்கடை கொள்ளையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்பு

கொள்ளையன் முருகன் அளித்த தகவலின் பேரில், மதுரையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருச்சி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 6 கிலோ தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி திருச்சியில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் கனகவள்ளி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . பெங்களூருவில் சரண் அடைந்த முருகன் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு போலீசார் காவிரி கரையில் புதைக்கப்பட்டிருந்த நான்கு கோடியே 30 லட்சம் மதிப்புடைய 12 கிலோ நகைகளை மீட்டனர் . அந்த நகைகளை முதலில் பெங்களூரு நீதிமன்றத்திலும் பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் மதுரை சமயநல்லூரை சேர்ந்த மகேந்திரன்,கணேசன் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி