தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை : முருகன் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 93

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நகைக்கடை கொள்ளையன் முருகன் மீது, தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 93 வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார். திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 28 கிலோ தங்க, வைர பிளாட்டின நகைகளில், 25 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், முருகனை போலீஸ் காவலில் எடுக்க பெங்களூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நடிகைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது குறித்து ஊடகங்களில் மட்டுமே செய்தி வெளியாகி உள்ளதாகவும் அது குறித்து தனிப்படை அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்