முசிறி அருகே கார் மோதி பயங்கர விபத்து - ஒருவர் பலி, 5 பேர் காயம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே, முன்னால் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் சுபாஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கரூர் மற்றும் நாமக்கல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான சிசிடிவி அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது