தமிழ்நாடு

நகர்த்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை... ஸ்ரீரங்கத்தில் அடியார்கள் போராட்டம் - பரபரப்பில் திருச்சி

தந்தி டிவி

ஸ்ரீரங்கம் கோயிலில் இடம் மாற்றி வைக்கப்பட்ட கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி 200க்கும் மேற்பட்ட அடியார்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் கோயில் ஆரியபடாள் வாசல் அருகே கம்பத்தடி ஆஞ்சநேயா் சிலை உள்ளது. மிகவும் பழைமையான இந்த சிலை, கடந்த 2015-ஆம் ஆண்டு கோயில் நிா்வாகத்தால் நகா்த்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெருமாள் அடியாா்கள், பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், சிலையை அதே இடத்தில் நிறுவக் கோரியும், கம்பத்தடி ஆஞ்சநேயா் சிலை அருகே பெருமாள் அடியாா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பெருமாள் பாடல்களை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடியார்களிடம் காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்