தமிழ்நாடு

Dharsha Gupta | Trichy Sathana | சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா

Trichy Sathana | சிக்கிய தர்ஷா குப்தா, திருச்சி சாதனா

thanthitv

ஆபாச பேச்சு - நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி, அதுதொடர்பான பதிவுகளை வெளியிட்டதாக நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 18 வயதுக்கு குறைவான இளம் தலைமுறையினரை பாதிக்கும் வகையில் ஆபாச பேச்சுகள் மற்றும் பதிவுகள் வெளியிடப்படுவதாக புகார் அளித்திருந்தார். குறிப்பாக, நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் நேரலையில் ஆபாசமாக பேசி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய 12 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Sengottaiyan | TVK | CM Vijay | "CM விஜய் விரைவில் அறிவிப்பார்..." - குட் நியூஸ் சொன்ன அமைச்சர் KAS

ATM Theft | தமிழகத்தையே பதறவைத்த ஸ்ரீபெரும்புதூர் ATM கொள்ளை - அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி

Swine Flu | H1N1 Surge | தமிழகத்தில் தீவிரமாக பரவும் `H1N1' வைரஸ்.. சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

Chennai | Onion Price | Central Government | ஒரே மாதத்தில் வெறி ஆட்டம் ஆடிய வெங்காயம் விலை

TN Govt Jobs|``கவர்மெண்ட் வேலையில் இனி இவர்களுக்கே முன்னுரிமை’’ - தமிழகத்தில் அமலாகிறது புதிய சட்டம்