திருச்சியில் மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய மணல் குவாரிகளை அனுமதிக்க கோரி, மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மோட்டார் வாகன சட்டத் திருத்த விதிகளை மீறி வரும் சரக்கு லாரிகளின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.