தமிழ்நாடு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்

மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
ரயில்வே டி பிரிவு எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, திருச்சி கோட்டத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடந்த 2ஆம் கட்ட நியமனத்தில், பொறியியல் பிரிவில் 262 நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் தண்டவாள பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் 39 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதர பிரிவில் நியமனம் செய்யப்பட்ட 89 பேரில் 5 பேர் மட்டுமே தமிழர்கள் என சொல்லப்படுகிறது. தமிழக ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வேயில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியில் சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்