தமிழ்நாடு

திருச்சி மத்திய சிறையில் திரைப்பட பாணியில் தப்பிய நைஜீரிய இளைஞர் - டெல்லியில் கைது

திருச்சி மத்திய சிறையில் இருந்து திரைப்பட பாணியில் தப்பிய, நைஜீரிய கைதியை டெல்லியில் வைத்து திருச்சி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தந்தி டிவி
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 32 வயது நைஜீரிய இளைஞர் ஸ்டீபன், திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்களுடன் அந்நாட்டைச் சேர்ந்த மேலும், நால்வர் உள்ளிட்ட 48 பேர் அந்த சிறையில் உள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் வந்த தண்ணீர் லாரியின் கீழ் தொங்கியபடி, திரைப்பட பாணியில், ஸ்டீபன் தப்பியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், ராஜஸ்தான், மும்பை, அங்கிருந்து டெல்லி என போலீசாருக்கு ஸ்டீபன் போக்குகாட்டியுள்ளார். ஸ்டீபனை பின்தொடர்ந்த தனிப்படை போலீஸ், டெல்லியில் வைத்து ஸ்டீபனை கைது செய்தது. திரைப்பட பாணியில் தப்பி, போலீசாருக்கு 57 நாட்கள் போக்கு கா​ட்டிய நைஜீரிய ஸ்டீபன் பாலுடனான, திருடன் போலீஸ் விளையாட்டு முடிவுக்கு வந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்