திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இனாம் குளத்தூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றியும், செருப்புகளை வீசியும் மர்மநபர்கள் அவமரியாதை செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பெரியார் சிலையில் ஊற்றப்பட்ட காவிச் சாயத்தை, தண்ணீர் ஊற்றி அழித்தனர். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.