தமிழ்நாடு

காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி - நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி

இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி தலையில் கல்லை போட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய சைக்கோ இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த செந்தில்குமார் என்பவர் கடந்த 3 ஆம் தேதி இரவு தலையில் கல்லால் அடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனும‌திக்கப்பட்டார். அவரது செல்போன் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தன. அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் கல்லால் கடுமையாக தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சமீப காலமாக சேலத்தில் தூங்கிகொண்டிருந்த 2 காவலாளிகள் சைக்கோ வாலிபரால் தாக்கப்பட்ட நிலையில், அதே சைக்கோ வாலிபர் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு