தமிழ்நாடு

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி : 3 நாட்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் மூன்று நாட்களில் நிறைவுபெறும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி எட்டு மதகுகள் உடைந்தன. அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் புதிய மேலணை 387 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அடிக்கல் நாட்டி துவக்கி வைத்திருந்தார். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 38 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறும் என்றும், காவிரியில் ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டாலும் தற்காலிக தடுப்பிற்கு பாதிப்பின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்