திருச்சி, மணப்பாறை அருகே முறையாக குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல எருதி கவுண்டம்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் முறையாக காவிரி குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களிலும் மின்மோட்டார் மூலம் காவிரி குடிநீரை உறிஞ்சி எடுத்து விடுவதால், காவிரி குடிநீர் குழாயில் நீர் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.