தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- மதுரையில் 2 பேரை கைது செய்தது தனிப்படை

திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் மதுரையில் இரண்டு பேரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தந்தி டிவி
திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் மதுரையில் இரண்டு பேரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமயநல்லூரை சேர்ந்த மகேந்திரன், திருச்சி நகை கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகனின் கூட்டாளி என கூறப்படுகிறது. மகேந்திரன் மூலமாக மதுரையில் உள்ள நகைப்பட்டறை உரிமையாளர் ஒருவரிடம் ஒரு கிலோ தங்க நகைகள் விற்றதாக வந்த தகவலை அடுத்து, சமயபுரம் விரைந்த தனிப்படையினர் அவரை கைது செய்துள்ளனர். மகேந்திரன் அளித்த தகவலின் பேரில் நகையை வாங்கியவரையும் கைது செய்துள்ள தனிப்படை போலீசார், அவரிடம் இருந்த 900 கிராம் தங்க நகைகளை மீட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்