திருச்சி நகை கொள்ளை வழக்கில், கைது செய்யப்பட்ட முருகனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளிகளான திருவாரூர் சுரேஷ், மதுரை கணேசன் ஆகியோரிடம் இருந்து, 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது முருகனிடம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.