திருச்சியில் கடந்த 2ஆம் தேதி பிரபல நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே நுழைந்த 2 கொள்ளையர்கள் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக 7 தனிப்படை அமைத்து 5 நாட்களாக போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, திருவாரூரில் வாகன சோதனையின் போது, கொள்ளை கும்பலை சேர்ந்த மணிகண்டனை மடக்கி பிடித்தனர். அப்போது தப்பியோடிய சுரேஷ் என்ற முக்கிய கொள்ளையனை பிடிக்க முடியாமல் திணறி வரும் போலீசார், அவரது தாய் கனகவல்லியை கைது செய்தனர். மணிகண்டனும், கனவல்லியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். முக்கிய கொள்ளையர்களான முருகன் மற்றும் சுரேஷை போலீசார் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களின்
உறவினர்கள் முரளி, கார்த்திக் உள்ளிட்ட 7 பேரை பிடித்து திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.