வழக்கமான வாகனச் சோதனையில் சிக்காமல் தலையில் ஹெல்மேட் அணிந்து மணிகண்டனும் சுரேஷூம் இருசக்கர வாகனத்தில் செல்ல சிறிது தூரத்தில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையிலான தனிப்படையினர் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர். சுரேஷ் தப்பியோடிவிட, நகைப்பையுடன் மணிகண்டன் சிக்கியுள்ளான். தப்பியோடிய சுரேஷின் உறவினர்களை திருவாரூர் காவல்நிலைத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தாய் கனகவள்ளியை திருச்சிக்கு அழைத்து வந்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் கனகவள்ளி ஆகியோரை போலீசார் திருச்சி காஜாமலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் மணிகண்டன் திருச்சி மத்திய சிறையிலும் கனகவள்ளி பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.