தமிழ்நாடு

திருச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் - காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டியில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18ஆம் தேதி இந்த பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புனித வியாகுல மாதா திடலில் நடைபெற்று வருகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில், சுமார் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாடி வாசலில் இருந்து காளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட, காளையர்கள் அதனுடன் மல்லுக்கட்டி விளையாடி வருகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்