திருச்சி மாநகராட்சிக்கு 76 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்த, தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி கட்டடத்தில், எம்.கே.முருகன் என்பவருக்கு சொந்தமான உணவு விடுதி இயங்கி வருகிறது. இவர் முறையாக வாடகை செலுத்தாததால், உதவி ஆணையர் தயாநிதி தலைமையில், அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.