தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு : ஒரே நாளில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் தம்பதி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் தம்பதி உயிரிழந்தனர். லால்குடியை அடுத்த தாரானூரை சேர்ந்த மகேந்திரன் - சந்தியா தம்பதியினருக்கு சந்தோஷ், சர்வேஷ் என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய நிலையில் வீட்டின் சந்து பகுதியை சந்தியா சுத்தம் செய்துள்ளார். அப்போது மின் ஒயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சந்தியாவை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கண்டு அவரை காப்பாற்ற முயன்ற கணவன் மகேந்திரனையும் மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவர்களை காப்பாற்ற முயன்ற மகேந்திரனின் சகோதரர் சக்திவேல் படுகாயமடைந்தார். மின் விபத்தில் குழந்தைகள் பெற்றோரை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை