திருச்சியில், மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழியை சேர்ந்தவர் சரவணன். இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்து வந்தார். கடந்த 26ஆம் தேதி பணியில் இருந்த போது அதிக அளவு மயக்க மருந்தை செலுத்திய நிலையில் சரவணன் மயங்கி கிடந்தார். கடந்த சில நாட்ளாக சிகிச்சை பெற்று வந்த சரவணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணனுக்கு திருமணம் செய்ய வீட்டில் பெண் பார்த்து வந்த நிலையில் அதில் விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.