தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்த நிலையில் அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

தந்தி டிவி

கடந்த மார்ச் 22ஆம் தேதி துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஈரோட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஈரோடு இளைஞர், முழுமையான பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டார். மருத்துவர்களும் செவிலியர்களும் மகிழ்ச்சியுடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்