திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, திடீரென ரகளையில் ஈடுபட்டுள்ளார். மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி, முகக் கவசத்தை வீசியும் அவர் அடாவடி தனம் செய்ததால், அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.