நடிகர் கார்த்தியின் "உழவன் ஃபவுண்டேஷன்" சார்பில், சென்னை மறைமலை நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்று நடும் பணி இன்று தொடங்கியது. தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, மரக்கன்றுகளை நடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மறைமலை நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் உழவன் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.