தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தந்தி டிவி

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 13ஆம் தேதி முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சேலம் சென்றுகொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக, விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தார். சுமார் 30 நிமிடங்கள் மருத்துவர்களுடன், முதல்வர் ஆலோசித்தார். முதலமைச்சருடன், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்