#Madurai #AyudhaPooaja #Celebration #ThanthiTV
Madurai | குடும்பத்தில் ஒருத்தரை போல்.. ஆட்டோவை அலங்கரித்து ஆயுத பூஜை கொண்டாடிய ஓட்டுனர்கள் மதுரை மதிச்சியம் பகுதியில் ஆட்டோக்களை குடும்ப உறுப்பினர்களைப் போல அலங்கரித்து ஓட்டுநர்கள் வழிபாடு நடத்தினர். தொழிலுக்கு உதவும் கருவிகளையும் இயந்திரங்களையும் தெய்வமாகப் போற்றி வழிபடும் வகையில், ஆட்டோக்களைக் கழுவி சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலைகள் மற்றும் வாழைக்கன்றுகளால் அலங்கரித்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து, பொரி, கடலை, சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்களை சக ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி ஆயுத பூஜையைக் கொண்டாடி உள்ளனர். மேலும், சங்க உறுப்பினர்களிடம் நிதி திரட்டி, ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.7,000 வரை தீபாவளி போனஸ் வழங்கியுள்ளனர்.