தமிழ்நாடு

தேர்வை ஒத்தி வைப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தந்தி டிவி

ஆகஸ்ட் 4-ல் நடைபெற இருந்த உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் மாதம் 14 தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு 73 ஆயிரத்து 311 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனிடையே,

அரசு கலை கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களும், தனியார் கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களும் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் காரணமாக உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வை நடத்துவதில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்