தமிழ்நாடு

டி.ஆர்.பி போட்டி தேர்வுகள் தொடக்கம் : 2,144 ஆசிரியர் காலி பணி இடங்கள்

தமிழகத்தில் 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.ஆர்.பி போட்டித் தேர்வுகள் தொடங்கின.

தந்தி டிவி
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான போட்டி தேர்வுகள் இன்று தொடங்கி, வருகிற 29ஆம் தேதி நிறைவுபெறுகிறது. மாநிலம் முழுவதும் 154 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வானது முதல்முறையாக கணினி வழியாக நடைபெறுகிறது. மொத்தம் 17 பாடங்களுக்கு இரண்டு அமர்வுகளாக தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் போட்டியாளர்களுக்கு ஆடை, காலணி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என தேர்வு வாரிய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்