தமிழ்நாடு

TRB Exam | ஆசிரியர் தேர்வு எழுதுபவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 708 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டி எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 708 உதவி பேராசிரியர்கள் பணி நிரந்தரமாக நிரப்பப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில், உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், 4 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும்..

புதியதாக, 2 ஆயிரத்து 708 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நிரப்ப அனுமதி வழங்கப்பட்டதாகவும்..

இதற்கான எழுத்துத் தேர்வு, நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலை நடைபெறும் தாள் ஒன்று தேர்வில், பகுதி 1-ல் தமிழ்மொழி தகுதித் தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு 30 வினாக்கள் கேட்கப்படும் எனவும்.. அதில் 40 சதவீதம் மதிப்பெண் கட்டாயம் எடுக்க வேண்டும் எனவும்..

பகுதி 2-ல் 150 மதிப்பெண்களுக்கு, 100 கேள்விகள் கேட்கப்படும் எனவும்.. அதன்பின்னர் மாலையில் நடைபெறும் தாள் 2 தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு விவரித்து எழுதும்படி கேள்விகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேர்காணலின்போது அனுபவதிற்கு அதிகபட்சம் 15 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 15 மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான இட ஒதுக்கீடு பெற்ற பிறகு, போட்டி எழுத்துத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப தேதி உள்ளிட்ட அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல் ஒருவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்