தமிழ்நாடு

நடத்துனரை தாக்கியதாக புகார் : போலீசாரை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

அரசு பேருந்து நடத்துனர் ஒருவரை மாற்று உடையில் இருந்த இரண்டு காவலர்கள் தாக்கியதால், போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கோவில்பட்டியில் போக்குவரத்து ஸ்தம்பித்த‌து.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில், நடத்துனர் ரூபன் புகைபிடித்துகொண்டிருந்த‌தாக கூறப்படுகிறது. அப்போது மாற்று உடையில் இருந்த கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மற்றொரு காவலர் ஒருவருடன் சேர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் நடத்துனருக்கு, தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து போக்குவரத்து ஊழியர்கள் திடீரென சாலை மறியல‌லில் ஈடுபட்டனர். தீபாவளி நேரம் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த‌நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், அங்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்